• May 08 2025

தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டணையை எதிர்கொள்ள தயார்! – பிரதமர் அறிவிப்பு

Chithra / May 7th 2025, 9:46 am
image

 

மொரட்டுவையில் தான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால், தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

2025 உள்ளூட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் நோக்கத்துடன் அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேநேரம், தற்போது சிறிய தவறுகள் கூட கேள்விக்குள்ளாக்கப்படுவது குறித்து பிரதமர் அமரசூரிய மேலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இது அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறியாகும் என்றும் அவர் கூறினார்.

2025 உள்ளூராட்சித் தேர்தலின் அமைதியான காலம் தொடங்கியிருந்தாலும், தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள் நுட்பமான வழிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்று மொரட்டுவாவில் அவர் ஆற்றிய உரையின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

 

தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டணையை எதிர்கொள்ள தயார் – பிரதமர் அறிவிப்பு  மொரட்டுவையில் தான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால், தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025 உள்ளூட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.தேர்தல் சட்டத்தை மீறும் நோக்கத்துடன் அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.அதேநேரம், தற்போது சிறிய தவறுகள் கூட கேள்விக்குள்ளாக்கப்படுவது குறித்து பிரதமர் அமரசூரிய மேலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.இது அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறியாகும் என்றும் அவர் கூறினார்.2025 உள்ளூராட்சித் தேர்தலின் அமைதியான காலம் தொடங்கியிருந்தாலும், தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள் நுட்பமான வழிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்று மொரட்டுவாவில் அவர் ஆற்றிய உரையின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement