• Sep 17 2024

யாழில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சி!

Sharmi / Dec 26th 2022, 1:28 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி மிக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 23ம் திகதி கணவன், மனைவி, குழந்தை மூவரும் இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, வீட்டுக்குள் மூவர் நுழைந்துள்ளனர்.

ஒருவர் வீட்டின் வாசலில் நிற்க மற்றவர் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.

இதன்போது இன்னொருவர் மனைவியை வன்புணர்விற்குற்படுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும் அவர்கள் எழுப்பிய சத்தத்தில் சந்தேக நபர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்றையதினம் பொலிஸார் அவர்களில் இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதித்தார்.

மூன்றாவது சந்தேகநபர் இன்றையதினம் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மீது இது போன்ற முறைப்பாடுகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

யாழில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி மிக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கடந்த 23ம் திகதி கணவன், மனைவி, குழந்தை மூவரும் இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, வீட்டுக்குள் மூவர் நுழைந்துள்ளனர்.ஒருவர் வீட்டின் வாசலில் நிற்க மற்றவர் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.இதன்போது இன்னொருவர் மனைவியை வன்புணர்விற்குற்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர்கள் எழுப்பிய சத்தத்தில் சந்தேக நபர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.சந்தேக நபர்களை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்றையதினம் பொலிஸார் அவர்களில் இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதித்தார்.மூன்றாவது சந்தேகநபர் இன்றையதினம் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இவர்கள் மீது இது போன்ற முறைப்பாடுகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement