• Jul 05 2025

ஓமந்தையில் பொலிஸாரால் காணி அபகரிப்பு முயற்சி!

shanuja / Jul 3rd 2025, 9:10 am
image

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார்  கையகப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கை  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (02) இடம்பெற்ற வேளை  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் இது தொடர்பான கேள்வியெழுப்பினார்.  


ஏ-9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியை  கடந்த  (30.06) துப்புரவு செய்துள்ளனர்.


குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.


 எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிஸார்  காணியை துப்பரவு செய்துள்ளனர்.


அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும். அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது. 


தற்போதுள்ள காணியில் இருந்து பொலிஸார் இன்னும் வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. 


இதனையடுத்து பொலிஸாருடன் இடம்பெற்ற வாக்குவாதங்களின்  பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. 


அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரச அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஓமந்தையில் பொலிஸாரால் காணி அபகரிப்பு முயற்சி ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார்  கையகப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கை  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (02) இடம்பெற்ற வேளை  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் இது தொடர்பான கேள்வியெழுப்பினார்.  ஏ-9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியை  கடந்த  (30.06) துப்புரவு செய்துள்ளனர்.குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிஸார்  காணியை துப்பரவு செய்துள்ளனர்.அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும். அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள காணியில் இருந்து பொலிஸார் இன்னும் வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இதனையடுத்து பொலிஸாருடன் இடம்பெற்ற வாக்குவாதங்களின்  பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரச அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement