• Mar 17 2025

நடுவானத்தில் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! குடிபோதையில் சிக்கிய இலங்கையர்

Chithra / Mar 16th 2025, 11:20 am
image

 

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வருகையின் போது, ​​சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.

அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நடுவானத்தில் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி குடிபோதையில் சிக்கிய இலங்கையர்  சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.வருகையின் போது, ​​சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement