• Jul 13 2025

மக்களே அவதானம்- கடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Sharmi / Jun 14th 2025, 6:17 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும். 

அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலி, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களே அவதானம்- கடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும். அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.காலி, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now