• May 03 2024

மக்களே அவதானம்...! அதிகரிக்கும் நோய்த் தாக்கங்கள்...! யாழில் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 10:38 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கின் தாக்கம் மற்றும் காய்ச்சல், தடிமன் உள்ளிட்ட நோய்த்தாக்கங்கள் மக்களிடையே அதிகரித்துள்ளது.

குறிப்பாக  காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைபெற வருவோரின் எண்ணிக்கையே உயர்வடைந்துள்ளது.

அதேவேளை யாழ். போதனா மருத்துவமனையில் 7,8, 9, 10 ஆம் இலக்க விடுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வைத்தியசாலையில் கட்டில்கள் போதாமையால் நோயாளர்கள் தரையிலும் நடைபாதையிலும் இருந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.



மக்களே அவதானம். அதிகரிக்கும் நோய்த் தாக்கங்கள். யாழில் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கின் தாக்கம் மற்றும் காய்ச்சல், தடிமன் உள்ளிட்ட நோய்த்தாக்கங்கள் மக்களிடையே அதிகரித்துள்ளது.குறிப்பாக  காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைபெற வருவோரின் எண்ணிக்கையே உயர்வடைந்துள்ளது.அதேவேளை யாழ். போதனா மருத்துவமனையில் 7,8, 9, 10 ஆம் இலக்க விடுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் வைத்தியசாலையில் கட்டில்கள் போதாமையால் நோயாளர்கள் தரையிலும் நடைபாதையிலும் இருந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement