• Nov 26 2024

யாழ் மக்களே அவதானம்...! 23 பேருக்கு சிக்கல்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 4th 2024, 10:30 am
image

யாழில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

இதனால் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறனதொரு நிலையில்,

யாழில்  டெங்கு பரவுதற்கு ஏதுவான நிலைமைகளைக் கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நேற்றையதினம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை 189 பேருக்கு எதிராக எச்சரிக்கைப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 114 பேர் டெங்குத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை பிரதேச மட்டங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்து வரும் விசேட வேலைத் திட்டங்களின் போது டெங்குப் பரவ லுக்கு ஏதுவாக அபாயகரமான இடங்களாக அவதானிக்கப்பட்டுள்ள இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக முன் னெடுக்கப்பட்டுள்ளது.

டெங்குத்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். மக்கள் தங்கள் குடியிருப்புகள் மற்றும் அயற்பிர தேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக் கூடிய பொருள்களை அகற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



யாழ் மக்களே அவதானம். 23 பேருக்கு சிக்கல். வெளியான அறிவிப்பு.samugammedia யாழில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.இதனால் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இவ்வாறனதொரு நிலையில்,யாழில்  டெங்கு பரவுதற்கு ஏதுவான நிலைமைகளைக் கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நேற்றையதினம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 189 பேருக்கு எதிராக எச்சரிக்கைப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 114 பேர் டெங்குத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை பிரதேச மட்டங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்து வரும் விசேட வேலைத் திட்டங்களின் போது டெங்குப் பரவ லுக்கு ஏதுவாக அபாயகரமான இடங்களாக அவதானிக்கப்பட்டுள்ள இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக முன் னெடுக்கப்பட்டுள்ளது.டெங்குத்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். மக்கள் தங்கள் குடியிருப்புகள் மற்றும் அயற்பிர தேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக் கூடிய பொருள்களை அகற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement