• Oct 24 2026

திருமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்வு

Aathira / Oct 23rd 2026, 7:17 am
image

திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகிப்பதற்கும்,

முன்னேற்றம் அடைவதற்கும் ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.

எனினும், வெளிப்படையாகப் பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் சிறப்பாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல்வேறு துயரமான சம்பவங்கள் மறைந்திருப்பதாகவும், 

குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பல சம்பவங்கள் உரிய முறையில் பதிவாகாமல் இருப்பது தற்போதைய காலகட்டத்தில் பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (22) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் நிதியுதவி வழங்கியது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டப் பகுப்பாய்வாளர்களான சட்டத்தரணி உதெனி தெவரப்பெரும மற்றும் பிமாலி அமரசேகர ஆகியோர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்குப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணுதல், அவற்றைத் தடுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வூட்டினர்.

அத்துடன், பெண்கள் விவகாரப் பணியகத்தின் ஆலோசகர் ருவன் ஹெட்டியாராச்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு திருகோணமலையில் இன்று நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க, பிரதேச செயலாளர்கள், இலங்கைப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட இத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்வு திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகிப்பதற்கும்,முன்னேற்றம் அடைவதற்கும் ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.எனினும், வெளிப்படையாகப் பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் சிறப்பாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல்வேறு துயரமான சம்பவங்கள் மறைந்திருப்பதாகவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பல சம்பவங்கள் உரிய முறையில் பதிவாகாமல் இருப்பது தற்போதைய காலகட்டத்தில் பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (22) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தேசிய சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் நிதியுதவி வழங்கியது.இதன்போது, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டப் பகுப்பாய்வாளர்களான சட்டத்தரணி உதெனி தெவரப்பெரும மற்றும் பிமாலி அமரசேகர ஆகியோர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்குப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணுதல், அவற்றைத் தடுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வூட்டினர்.அத்துடன், பெண்கள் விவகாரப் பணியகத்தின் ஆலோசகர் ருவன் ஹெட்டியாராச்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு திருகோணமலையில் இன்று நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க, பிரதேச செயலாளர்கள், இலங்கைப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட இத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement