• Feb 02 2025

மக்களுக்கு சிறப்பான தரத்தில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் - அமைச்சர் பணிப்புரை

Chithra / Feb 2nd 2025, 1:26 pm
image

 

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின் புதிய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை.

தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் புதிய உறுப்பினர்களுடன் உரையாடினார்.

மேலும் மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அரசாங்கம் கோருவதாக

அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு சிறப்பான தரத்தில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் - அமைச்சர் பணிப்புரை  மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின் புதிய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை.தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் புதிய உறுப்பினர்களுடன் உரையாடினார்.மேலும் மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அரசாங்கம் கோருவதாகஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement