• Jul 05 2025

Thansita / Jul 3rd 2025, 9:01 pm
image

சளி அடைத்து 5 மாத சிசு உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.

நேற்று மாலை சிசு சளி அடைப்பு காரணமாக பெற்றோர் முச்சக்கர வண்டி வாடகைக்கு அமர்த்தி சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு  கொண்டு சென்றனர்

இந்நிலையில்  வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிசு மரணம் அடைந்த நிலையில் உள்ளது தெரிய வந்தது.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

புரவுன்சீக தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவிற்கு செல்லும் வீதி சுமார் இரண்டு கிலோ மீட்டர் மிகவும் பாரிய குன்றும் குழியுமாக உள்ள நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது 

இதனால்  இந்த இரண்டு கிலோ மீட்டர் வீதியை தோட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்பனிட்டு தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.


சளி அடைத்து சிசு மரணம் சளி அடைத்து 5 மாத சிசு உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.நேற்று மாலை சிசு சளி அடைப்பு காரணமாக பெற்றோர் முச்சக்கர வண்டி வாடகைக்கு அமர்த்தி சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு  கொண்டு சென்றனர்இந்நிலையில்  வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிசு மரணம் அடைந்த நிலையில் உள்ளது தெரிய வந்தது.சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.புரவுன்சீக தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவிற்கு செல்லும் வீதி சுமார் இரண்டு கிலோ மீட்டர் மிகவும் பாரிய குன்றும் குழியுமாக உள்ள நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது இதனால்  இந்த இரண்டு கிலோ மீட்டர் வீதியை தோட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்பனிட்டு தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement