• May 19 2024

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள்: சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ! SamugamMedia

Tamil nila / Mar 3rd 2023, 5:21 pm
image

Advertisement

பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.


புதன்கிழமை, Vicq-sur-Mer கடற்கரையில் மேலும் ஆறு பைகள் கரையொதுங்கின.மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு அந்த போதைப்பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. 


அந்த போதைப்பொருளின் மதிப்பு 150 மில்லியன் யூரோக்களாகும்.


அந்த போதைப்பொருள் பாக்கெட்கள் எப்படி அந்த கடற்கரைக்கு வந்தன, அவை எந்த நாட்டிலிருந்து வந்தவை என்பது உட்பட எந்த தகவலும் தெரியாத நிலையில், விமானம் மூலம் குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர்.


பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள்: சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி SamugamMedia பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.புதன்கிழமை, Vicq-sur-Mer கடற்கரையில் மேலும் ஆறு பைகள் கரையொதுங்கின.மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு அந்த போதைப்பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு 150 மில்லியன் யூரோக்களாகும்.அந்த போதைப்பொருள் பாக்கெட்கள் எப்படி அந்த கடற்கரைக்கு வந்தன, அவை எந்த நாட்டிலிருந்து வந்தவை என்பது உட்பட எந்த தகவலும் தெரியாத நிலையில், விமானம் மூலம் குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement