• May 07 2024

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பீடி இலைகள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! SamugamMedia

Tamil nila / Mar 3rd 2023, 5:25 pm
image

Advertisement

பீடி இலைகளை கடத்துவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கண்டகுடா பகுதியில் வைத்து இன்று அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பீடி இலைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாக ஜடற்படையினர் தெரிவித்தனர்.


இதன்போது பீடி இலைகள் மற்றும் ஏற்றுவதற்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதாக விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

35 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 111 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்த சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 2 கோடி ரூபாவிற்கும் பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிப்பர் வாகனம் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக கற்பிட்டி பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகள் தொடர்தும் கடத்தப்பட்டு வருவதாக விஜய கடற்படைப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பீடி இலைகள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம் SamugamMedia பீடி இலைகளை கடத்துவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கண்டகுடா பகுதியில் வைத்து இன்று அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது பீடி இலைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாக ஜடற்படையினர் தெரிவித்தனர்.இதன்போது பீடி இலைகள் மற்றும் ஏற்றுவதற்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதாக விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.35 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 111 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்த சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 2 கோடி ரூபாவிற்கும் பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிப்பர் வாகனம் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகள தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக கற்பிட்டி பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகள் தொடர்தும் கடத்தப்பட்டு வருவதாக விஜய கடற்படைப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement