• May 17 2024

குரங்கோடு செல்ஃபி எடுத்த பால் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 4:26 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை அமலா பால்.

மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகிய அமலாபால்,குறித்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.



2010-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் இவர் பிரபலமானவர்.

அதேவேளை விக்ரம்,விஜய், தனுஷ் உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.



குறிப்பாக விஜய்யுடன் அமலாபால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.


இந்நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கும் சென்று போட்டோசூட்களை நடாத்தி சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

அமலாபால், தமது இன்ஸ்டா பக்கத்தில் இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

குரங்கு ஒன்றை அமலாபால் தனது மடியில் வைத்து இருப்பது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் குரங்குடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அமலாபால் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது செம ரெண்டிங் ஆகி வருகிறது.








குரங்கோடு செல்ஃபி எடுத்த பால் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்SamugamMedia தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை அமலா பால்.மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகிய அமலாபால்,குறித்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். 2010-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் இவர் பிரபலமானவர்.அதேவேளை விக்ரம்,விஜய், தனுஷ் உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக விஜய்யுடன் அமலாபால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். இந்நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கும் சென்று போட்டோசூட்களை நடாத்தி சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.அமலாபால், தமது இன்ஸ்டா பக்கத்தில் இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குரங்கு ஒன்றை அமலாபால் தனது மடியில் வைத்து இருப்பது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் குரங்குடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அமலாபால் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது செம ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement