மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை, நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போது செலுத்த வேண்டிய (PAYE) வரியைக் அறவிடுவதை தடுக்கும் உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது சம்பளத்தில் இருந்து உரிய வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி நீதிபதிகளிடமிருந்து உழைக்கும்போது செலுத்தும் (Payee Tax) வரி வசூலிக்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கடந்த ஜனவரி 25 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகளின் சம்பளத்தில் வரியை அறவிடுதற்கு எதிரான தடை நீடிப்பு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை, நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போது செலுத்த வேண்டிய (PAYE) வரியைக் அறவிடுவதை தடுக்கும் உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது சம்பளத்தில் இருந்து உரிய வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன்படி நீதிபதிகளிடமிருந்து உழைக்கும்போது செலுத்தும் (Payee Tax) வரி வசூலிக்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கடந்த ஜனவரி 25 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.