• Nov 23 2024

பசில் நாடு திரும்புவது ரணிலை அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்கல்ல! ராஜபக்சக்களின் சகோதரர் பகிரங்கம்

Chithra / Feb 26th 2024, 8:39 am
image

 

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாக  ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்சக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே அதற்கான வியூகத்துடன் பசில் ராஜபக்ச மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன மற்றும் பசில் ராஜபக்சவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பசில் ராஜபக்சவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது. 

அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்சவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்சவின் பிரதான பணியாக இருந்தது.

இவ்வாறான நிலையில், பசில் ராஜபக்ச மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை அதிபரே செய்ய வேண்டும். இருப்பினும், பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். என தெரிவித்தார்.

பசில் நாடு திரும்புவது ரணிலை அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்கல்ல ராஜபக்சக்களின் சகோதரர் பகிரங்கம்  பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாக  ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்சக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.எனவே அதற்கான வியூகத்துடன் பசில் ராஜபக்ச மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.பொதுஜனபெரமுன மற்றும் பசில் ராஜபக்சவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பசில் ராஜபக்சவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்சவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்சவின் பிரதான பணியாக இருந்தது.இவ்வாறான நிலையில், பசில் ராஜபக்ச மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்காக அல்ல.பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை அதிபரே செய்ய வேண்டும். இருப்பினும், பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement