• Sep 17 2024

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரம் மூலம் மீன்பிடி- அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Sharmi / Jan 25th 2023, 7:41 pm
image

Advertisement

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில்  தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக, குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்த வேளை, குறித்த படகு தொடர்பில் கருத்து தெரிவித்ததுடன், அந்த படகானது பலமடங்கு செலவுகளை குறைக்கும் என அமைச்சர் சுட்டிக் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரம் மூலம் மீன்பிடி- அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில்  தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக, குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்த வேளை, குறித்த படகு தொடர்பில் கருத்து தெரிவித்ததுடன், அந்த படகானது பலமடங்கு செலவுகளை குறைக்கும் என அமைச்சர் சுட்டிக் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement