• May 17 2024

பாக்கு நீரிணை நீந்தி சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவர்கள்..! samugammedia

Chithra / Oct 23rd 2023, 6:39 am
image

Advertisement

 

தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த சாதனை நிகழ்விற்காக நேற்றுமுன்தினம் (21) மாலை 4.00 மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று நேற்று (22) அதிகாலை 3.00 மணியளவில்  கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து  மதியம் 1.00 மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர்.

குறித்த சாதனை மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக  உறுப்பினர்கள் உட்பட  பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த சாதனை நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும்,  15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்தார்கள்

இவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.


பாக்கு நீரிணை நீந்தி சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவர்கள். samugammedia  தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள்.குறித்த சாதனை நிகழ்விற்காக நேற்றுமுன்தினம் (21) மாலை 4.00 மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று நேற்று (22) அதிகாலை 3.00 மணியளவில்  கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து  மதியம் 1.00 மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர்.குறித்த சாதனை மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக  உறுப்பினர்கள் உட்பட  பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.இந்த சாதனை நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும்,  15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்தார்கள்இவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement