• Nov 28 2024

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு..!

Sharmi / Oct 5th 2024, 11:54 am
image

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இனத்திற்கே சேவை செய்கின்றார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

வன்னியில் நேற்றையதினம்(04) வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனசத பெரமுன கட்சி வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றது. 

இன, மத பேதமின்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.

வன்னியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்கள் இன, மதம் பார்க்காது அனைவருக்கும் உதவி செய்கின்றார்கள். 

அதுபோல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்களும் இன, மத பேதமின்றி மக்களுக்குச் சேவை செய்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் அவர்கள் தமது இனத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றார்கள். 

ஆனால், நாம் வந்தால் வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பாராது அனைத்து இன மக்களையும் ஒன்றிணைந்து அவர்களுக்கு இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் எனவும் தெரிவித்தார்.


முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இனத்திற்கே சேவை செய்கின்றார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.வன்னியில் நேற்றையதினம்(04) வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனசத பெரமுன கட்சி வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றது. இன, மத பேதமின்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.வன்னியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்கள் இன, மதம் பார்க்காது அனைவருக்கும் உதவி செய்கின்றார்கள். அதுபோல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்களும் இன, மத பேதமின்றி மக்களுக்குச் சேவை செய்கின்றார்கள்.ஆனால், முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் அவர்கள் தமது இனத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றார்கள். ஆனால், நாம் வந்தால் வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பாராது அனைத்து இன மக்களையும் ஒன்றிணைந்து அவர்களுக்கு இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement