• Nov 14 2024

நேட்டோ மாநாட்டில் பைடன் ஆக்ரோஷமான உரை: உக்ரேனுக்கு வான் தற்காப்பு சாதனம்!

Tamil nila / Jul 10th 2024, 7:01 pm
image

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் வேளையில் தனது உடலுறுதியை நிரூபிக்கும் வகையில் நேட்டோ மாநாட்டின் தொடக்கத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றியிருக்கிறார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அந்த மாநாடு மூன்று நாள் நடைபெறுகிறது. நேட்டோவின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாநாடு களைகட்டுகிறது. 32 நாடுகளின் ராணுவக் கூட்டணியின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளைக் காட்டும்விதமாகவும் மாநாடு அமைகிறது.

கடந்த ஜூன் 27ஆம் திகததி டோனல்ட் டிரம்புக்கு எதிரான விவாதத்தில் 81 வயது ஜோ பைடன் தடுமாறியதால் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய பைடன், உக்ரேனுக்கு வாஷிங்டன் கூடுதல் வான் பாதுகாப்பு சாதனங்களை அளிக்கும் என்றார்.“உக்ரேன் சுதந்திரமடைந்ததும் போர் முடிவுக்கு வரும். ரஷ்யா வெற்றி பெறாது,” என்று 1949ல் நேட்டோ தோற்றத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான அறையில் அவர் பேசினார்.“இது, ஐரோப்பா, அட்லாண்டிக் சமூகத்துக்கு மட்டுமல்ல, உலகிற்கும் ஒரு முக்கிய தருணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெர்மனியும் ருமேனியாவும் ஏற்கெனவே புதிய வான் தற்காப்பு சாதனங்களை வழங்கியுள்ளன. இதற்கு மேலாக அமெரிக்காவும் வான் பாதுகாப்பு சாதனத்தை உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளது.“வான் தற்காப்பு முறை, உக்ரேனின் நகரங்களை, குடிமக்களை, ராணுவ வீரர்களைக் காக்கும்,” என்று இதர தலைவர்களுடனான கூட்டு அறிக்கையில் பைடன் தெரிவித்திருந்தார்.

வரும் மாதங்களில் குறுந்தொலைவு ஏவுகணைகளை வழங்கப் போவதாகவும் அறிக்கை தெரிவித்தது.

ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரேன் சீரழிந்து வருகிறது. அண்மையில் ஜூலை 9ஆம் திகதி கியவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியதாகக் கூறப்படுகிறது. உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி,  அன்றைய தினம் சரமாரியான தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.


நேட்டோ மாநாட்டில் பைடன் ஆக்ரோஷமான உரை: உக்ரேனுக்கு வான் தற்காப்பு சாதனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் வேளையில் தனது உடலுறுதியை நிரூபிக்கும் வகையில் நேட்டோ மாநாட்டின் தொடக்கத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றியிருக்கிறார்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அந்த மாநாடு மூன்று நாள் நடைபெறுகிறது. நேட்டோவின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாநாடு களைகட்டுகிறது. 32 நாடுகளின் ராணுவக் கூட்டணியின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளைக் காட்டும்விதமாகவும் மாநாடு அமைகிறது.கடந்த ஜூன் 27ஆம் திகததி டோனல்ட் டிரம்புக்கு எதிரான விவாதத்தில் 81 வயது ஜோ பைடன் தடுமாறியதால் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய பைடன், உக்ரேனுக்கு வாஷிங்டன் கூடுதல் வான் பாதுகாப்பு சாதனங்களை அளிக்கும் என்றார்.“உக்ரேன் சுதந்திரமடைந்ததும் போர் முடிவுக்கு வரும். ரஷ்யா வெற்றி பெறாது,” என்று 1949ல் நேட்டோ தோற்றத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான அறையில் அவர் பேசினார்.“இது, ஐரோப்பா, அட்லாண்டிக் சமூகத்துக்கு மட்டுமல்ல, உலகிற்கும் ஒரு முக்கிய தருணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.ஜெர்மனியும் ருமேனியாவும் ஏற்கெனவே புதிய வான் தற்காப்பு சாதனங்களை வழங்கியுள்ளன. இதற்கு மேலாக அமெரிக்காவும் வான் பாதுகாப்பு சாதனத்தை உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளது.“வான் தற்காப்பு முறை, உக்ரேனின் நகரங்களை, குடிமக்களை, ராணுவ வீரர்களைக் காக்கும்,” என்று இதர தலைவர்களுடனான கூட்டு அறிக்கையில் பைடன் தெரிவித்திருந்தார்.வரும் மாதங்களில் குறுந்தொலைவு ஏவுகணைகளை வழங்கப் போவதாகவும் அறிக்கை தெரிவித்தது.ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரேன் சீரழிந்து வருகிறது. அண்மையில் ஜூலை 9ஆம் திகதி கியவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியதாகக் கூறப்படுகிறது. உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி,  அன்றைய தினம் சரமாரியான தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement