• May 03 2024

பிறப்பு, இறப்பு சான்றிதழில் மீண்டும் இந்திய வம்சாவளியினர்...! பதிவாளர் நாயகம் ஒப்புதல்...!samugammedia

Sharmi / Oct 24th 2023, 7:10 pm
image

Advertisement

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளியினர் என  பதிவிடலாம் என பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி  பதிவாளர் நாயகத்தால்  வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. 

பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று இருந்தனர். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, இறப்பு சான்றிதழில் மீண்டும் இந்திய வம்சாவளியினர். பதிவாளர் நாயகம் ஒப்புதல்.samugammedia பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளியினர் என  பதிவிடலாம் என பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி  பதிவாளர் நாயகத்தால்  வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று இருந்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement