• Dec 14 2024

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்ற பிஸ்ரியா...!

Sharmi / Mar 5th 2024, 1:00 pm
image

தேசிய மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதினை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுள்ளார்.

இலங்கை மகளிர் தொழில் துறை மற்றும் வர்த்தக சம்மேளனம் (WCIC) நடாத்திய "சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது விழாவில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த விருது வழங்கும் விழா கொழும்பில் அண்மையில் இடம் பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இவரை பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 




தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்ற பிஸ்ரியா. தேசிய மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதினை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுள்ளார்.இலங்கை மகளிர் தொழில் துறை மற்றும் வர்த்தக சம்மேளனம் (WCIC) நடாத்திய "சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது விழாவில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.குறித்த விருது வழங்கும் விழா கொழும்பில் அண்மையில் இடம் பெற்றது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இவரை பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இதில் தம்பலகாமம் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement