• Sep 23 2024

யாழில் வைத்தியர்களால் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுப்பு!

Sharmi / Jan 24th 2023, 2:28 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து  கடமையாற்றினர்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற  கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று  இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்றவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.





யாழில் வைத்தியர்களால் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து  கடமையாற்றினர்.அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற  கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று  இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்றவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement