• Nov 28 2024

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

Chithra / Jun 25th 2024, 10:26 am
image

 

கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியதவனய பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காணாமல் போய் சுமார் ஒரு மாதமாகியுள்ளதாகவும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு  கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியதவனய பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் காணாமல் போய் சுமார் ஒரு மாதமாகியுள்ளதாகவும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement