• May 03 2024

பிரேசிலின் முக்கிய இடங்களுக்குள் அதிரடியாக நுழைந்த பொல்சொனாரோவின் ஆதரவாளர்களால் பரபரப்பு!

Sharmi / Jan 9th 2023, 9:48 am
image

Advertisement

பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே,  பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் ஆகிய இடங்களுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அதேவேளை பிரேசிலில் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோவின் (Jair Bolsonaro) ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்ததற்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva), கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


டா சில்வா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதைத் பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதிபர் டா சில்வா பதவி விலக வேண்டும் என்றும் ராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொல்சொனாரோ ஆதரவாளர்களின் வன்முறை, ஃபாசிச (fascist) வெறிச்செயல் என்று அதிபர் டா சில்வா கூறினார்.

பிரேசில் தலைநகரில் மத்திய அரசின் தலையீட்டுக்கு உத்தரவிட்ட அவர், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கத்துக்குச் சிறப்பு அதிகாரம் அளித்துள்ளார்.

முன்னாள் அதிபர் பொல்சொனாரோ தம்முடைய பேச்சின் மூலம் வன்செயல்களை ஊக்குவிப்பதாகத் திரு. டா சில்வா குற்றஞ்சாட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (6 ஜனவரி) டா சில்வா பிரேசில் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குச் சற்று முன்னர் பொல்சொனாரோ புளோரிடா (Florida) புறப்பட்டுச் சென்றார். 

புதிய அதிபர் பதவியேற்கும்போது முன்னைய அதிபர் அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது பிரேசிலின் வழக்கம்.

ஆனால் பொல்சொனாரோ அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரேசிலின் முக்கிய இடங்களுக்குள் அதிரடியாக நுழைந்த பொல்சொனாரோவின் ஆதரவாளர்களால் பரபரப்பு பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிலையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கிடையே,  பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் ஆகிய இடங்களுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.அதேவேளை பிரேசிலில் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோவின் (Jair Bolsonaro) ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்ததற்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva), கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.டா சில்வா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதைத் பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதிபர் டா சில்வா பதவி விலக வேண்டும் என்றும் ராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.பொல்சொனாரோ ஆதரவாளர்களின் வன்முறை, ஃபாசிச (fascist) வெறிச்செயல் என்று அதிபர் டா சில்வா கூறினார்.பிரேசில் தலைநகரில் மத்திய அரசின் தலையீட்டுக்கு உத்தரவிட்ட அவர், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கத்துக்குச் சிறப்பு அதிகாரம் அளித்துள்ளார்.முன்னாள் அதிபர் பொல்சொனாரோ தம்முடைய பேச்சின் மூலம் வன்செயல்களை ஊக்குவிப்பதாகத் திரு. டா சில்வா குற்றஞ்சாட்டினார்.கடந்த வெள்ளிக்கிழமை (6 ஜனவரி) டா சில்வா பிரேசில் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குச் சற்று முன்னர் பொல்சொனாரோ புளோரிடா (Florida) புறப்பட்டுச் சென்றார். புதிய அதிபர் பதவியேற்கும்போது முன்னைய அதிபர் அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது பிரேசிலின் வழக்கம்.ஆனால் பொல்சொனாரோ அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement