வடக்கு டகோட்டாவிற்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றிற்கு எதிரே அமெரிக்க இராணுவப் படையின் குண்டுவீச்சு விமானம் மோதும் வகையில் வானில் பறந்துள்ளது.
மின்னியாபோலிஸிலிருந்து வடக்கு டகோட்டாவின் மினோட் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற டெல்டா இணைப்பு விமானமான ஸ்கைவெஸ்ட் விமானம் 3788, கடந்த வெள்ளிக்கிழமை பயணத்தை மேற்கொண்டிருந்தது.
அப்போது, அமெரிக்க விமானப்படையின் B-52 குண்டுவீச்சு விமானம், டெல்டா விமானத்திற்கு எதிரே நடுவானில் மோதும் வகையில் பயணித்துள்ளது.
அதனைத் தடுக்க விமானி “ஆக்ரோஷமான” தப்பிக்கும் சூழ்ச்சியைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
டெல்டா விமானத்தின் 90 நிமிட பயணத்தின் போது, மினோட் விமானப்படை தளத்திலிருந்து B-52 எம்ப்ரேயர் E175 குண்டுவீச்சசு விமானம் ஆபத்தான முறையில் மோதுவதற்கு அருகில் வந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து டெல்டா விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கி பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினார். இது தொடர்பில் விமானி தெரிவிக்கையில்,
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு முதலில் வலதுபுறம் திரும்ப உத்தரவிட்டது. ஆனால் குண்டுவீச்சு விமானம் ஒன்றுகூடும் பாதையில் இருப்பதைக் கண்டதும், இடதுபுறம் திரும்பச் சொல்லப்பட்டது. இராணுவ விமானம் வேகமாக நகர்வதை உணர்ந்த பின்னர் சூழ்ச்சி செய்யத் தேர்ந்தெடுத்தேன். இது சாதாரணமானது அல்ல.
"அவர்கள் ஏன் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை." என்றார்.
அதன்பின்னர் பயணி ஒருவர் தெரிவிக்கையில், விமானம் கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் விமானி "புல்லை நோக்கி" இருந்தார். பல பயணிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்ததாகவும், இயந்திரக் கோளாறு இருப்பதாக அஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளன. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல விமான விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று டாக்காவில் கல்லூரி வளாகத்தில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியது. இது பயணிகள் விமானப் பயணத்தை மேற்கொள்ள பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா விமானத்திற்கு எதிரே பயணித்த குண்டுவீச்சு விமானம் பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி வடக்கு டகோட்டாவிற்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றிற்கு எதிரே அமெரிக்க இராணுவப் படையின் குண்டுவீச்சு விமானம் மோதும் வகையில் வானில் பறந்துள்ளது.மின்னியாபோலிஸிலிருந்து வடக்கு டகோட்டாவின் மினோட் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற டெல்டா இணைப்பு விமானமான ஸ்கைவெஸ்ட் விமானம் 3788, கடந்த வெள்ளிக்கிழமை பயணத்தை மேற்கொண்டிருந்தது. அப்போது, அமெரிக்க விமானப்படையின் B-52 குண்டுவீச்சு விமானம், டெல்டா விமானத்திற்கு எதிரே நடுவானில் மோதும் வகையில் பயணித்துள்ளது. அதனைத் தடுக்க விமானி “ஆக்ரோஷமான” தப்பிக்கும் சூழ்ச்சியைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். டெல்டா விமானத்தின் 90 நிமிட பயணத்தின் போது, மினோட் விமானப்படை தளத்திலிருந்து B-52 எம்ப்ரேயர் E175 குண்டுவீச்சசு விமானம் ஆபத்தான முறையில் மோதுவதற்கு அருகில் வந்தாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து டெல்டா விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கி பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினார். இது தொடர்பில் விமானி தெரிவிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு முதலில் வலதுபுறம் திரும்ப உத்தரவிட்டது. ஆனால் குண்டுவீச்சு விமானம் ஒன்றுகூடும் பாதையில் இருப்பதைக் கண்டதும், இடதுபுறம் திரும்பச் சொல்லப்பட்டது. இராணுவ விமானம் வேகமாக நகர்வதை உணர்ந்த பின்னர் சூழ்ச்சி செய்யத் தேர்ந்தெடுத்தேன். இது சாதாரணமானது அல்ல. "அவர்கள் ஏன் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை." என்றார். அதன்பின்னர் பயணி ஒருவர் தெரிவிக்கையில், விமானம் கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் விமானி "புல்லை நோக்கி" இருந்தார். பல பயணிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்ததாகவும், இயந்திரக் கோளாறு இருப்பதாக அஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளன. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல விமான விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று டாக்காவில் கல்லூரி வளாகத்தில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியது. இது பயணிகள் விமானப் பயணத்தை மேற்கொள்ள பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.