• May 02 2024

காரமான உணவை சாப்பிட்டதால் எலும்பு முறிவு... பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Tamil nila / Dec 8th 2022, 7:03 pm
image

Advertisement

மிகவும் காரமான உணவை சாப்பிட்டதை அடுத்து வந்த இருமலால், பெண்ணின் 4 விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. 


விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதிகமாக இருமல் வந்து, இருமியதால் ஒரு பெண்ணுக்கு விலா எலும்புகள் முறிந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால், அதுதான் உண்மை. 


சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில், காரணமான உணவை உண்டதால், ஹுவாங் என்ற பெண்ணுக்கு அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து, இருமியதால் அவரின் நான்கு விலா எலும்புகள் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது. 


ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில், சில நாள்கள் கழித்து அவருக்கு பேசுவதிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்துள்ளது. பின்னர், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். தொடர்ந்து, இடுப்புக்கு மேலே இருக்கமான பேன்டேஜை ஒருமாத காலமாக இருக்கமாக அணிந்து வந்தால், அவை தானாக சீராகும் என்றும் கூறியுள்ளார். 



ஹுவாங்கிற்கு விலா எலும்பு முறிவதற்கு முதன்மை காரணம் அவரின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது. ஆரோக்கியமற்ற முறையில் அவர் மெலிதாக இருப்பதால்தான் அவர் இருமியதிலேயே விலா எலும்பு முறிந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


அவரின் விலா எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு அவர் மெலிதாக இருக்கிறார். 57 கிலோ உடல் எடையைக் கொண்ட ஹுவாங், 5 அடி 6 இன்ச் உயரத்தில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.


நெஞ்சுப் பகுதியில் அவருக்கு சதை குறைவாக இருப்பதால், எலும்புகளை பாதுகாக்கும் வகையிலும் தசை இல்லை. எனவேதான், அவரின் விலா எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. 


மேல் உடம்பின் எடையை அதிகரித்து, சில பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டும் மீண்டும் இதுபோன்று நடக்காது எனவும், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவும் முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

காரமான உணவை சாப்பிட்டதால் எலும்பு முறிவு. பெண்ணுக்கு நேர்ந்த சோகம் மிகவும் காரமான உணவை சாப்பிட்டதை அடுத்து வந்த இருமலால், பெண்ணின் 4 விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதிகமாக இருமல் வந்து, இருமியதால் ஒரு பெண்ணுக்கு விலா எலும்புகள் முறிந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால், அதுதான் உண்மை. சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில், காரணமான உணவை உண்டதால், ஹுவாங் என்ற பெண்ணுக்கு அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து, இருமியதால் அவரின் நான்கு விலா எலும்புகள் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில், சில நாள்கள் கழித்து அவருக்கு பேசுவதிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்துள்ளது. பின்னர், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். தொடர்ந்து, இடுப்புக்கு மேலே இருக்கமான பேன்டேஜை ஒருமாத காலமாக இருக்கமாக அணிந்து வந்தால், அவை தானாக சீராகும் என்றும் கூறியுள்ளார். ஹுவாங்கிற்கு விலா எலும்பு முறிவதற்கு முதன்மை காரணம் அவரின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது. ஆரோக்கியமற்ற முறையில் அவர் மெலிதாக இருப்பதால்தான் அவர் இருமியதிலேயே விலா எலும்பு முறிந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் விலா எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு அவர் மெலிதாக இருக்கிறார். 57 கிலோ உடல் எடையைக் கொண்ட ஹுவாங், 5 அடி 6 இன்ச் உயரத்தில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.நெஞ்சுப் பகுதியில் அவருக்கு சதை குறைவாக இருப்பதால், எலும்புகளை பாதுகாக்கும் வகையிலும் தசை இல்லை. எனவேதான், அவரின் விலா எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேல் உடம்பின் எடையை அதிகரித்து, சில பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டும் மீண்டும் இதுபோன்று நடக்காது எனவும், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவும் முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement