மட்டக்களப்பு - ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் குறித்த சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், ஒன்றான மேல் நோக்கி சுற்றிவரும் ஊஞ்சலில் சிறுவர்களை ஏற்றி அங்கு கடமையில் இருந்தவர்கள் இயக்க வைத்துக் கொண்டிருந்த போது ஊஞ்சல் திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது.
இதில், காயமடைந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன். தமிழர் பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு - ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் குறித்த சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில், ஒன்றான மேல் நோக்கி சுற்றிவரும் ஊஞ்சலில் சிறுவர்களை ஏற்றி அங்கு கடமையில் இருந்தவர்கள் இயக்க வைத்துக் கொண்டிருந்த போது ஊஞ்சல் திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது.இதில், காயமடைந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.