• May 03 2024

3 ஆண்டுகள் கூடாரத்தில் தங்கி நிதி திரட்டி உலக சாதனை படைத்த சிறுவன்! samugammedia

Chithra / Apr 3rd 2023, 7:39 pm
image

Advertisement

இங்கிலாந்தைச் சேர்ந்த மேக்ஸ் வூசே (Max Woosey) எனும் 10 வயதுச் சிறுவன் சுமார் 3 ஆண்டுகளாகக் கூடாரத்தில் தங்கி அறப்பணிகளுக்காக நிதி திரட்டியிருக்கிறார்.

"Boy in the Tent" என அறியப்படும் அந்த திட்டத்தை மேக்ஸ் அதனை 2020ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆரம்பித்தார். இத் திட்டத்தின்கீழ் சுமார் 8,60,000 டாலர் நிதியை மேக்ஸ் திரட்டினார்.

தனிநபராக அவ்வளவு பெரிய தொகையைத் திரட்டியதற்காக உலகச் சாதனைப் புத்தகத்திலும் மேக்ஸ் இடம்பிடித்தார்.


முன்னதாக மேக்ஸின் இந்தத் திட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியபோது சில இரவுகளை வெவ்வேறு இடங்களில் கழிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் லண்டன் விலங்கியல் தோட்டமும் அதில் ஒன்று. தமது அனுபவம் பற்றி கூறிய மேக்ஸ்,

"இந்த 3 ஆண்டுகள்தான் வாழ்நாளில் மிகச் சிறந்த தருணம்.அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். அளவில்லாத அனுபவங்களையும் பெற்றதாக தெரிவித்த சிறுவன் மேக்ஸ், வெளிப்புறக் கூடாரத்தில் உறங்கிப் பழகிவிட்டதால் இனி மெத்தையில் எப்படிப் படுத்துறங்குவது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.


3 ஆண்டுகள் கூடாரத்தில் தங்கி நிதி திரட்டி உலக சாதனை படைத்த சிறுவன் samugammedia இங்கிலாந்தைச் சேர்ந்த மேக்ஸ் வூசே (Max Woosey) எனும் 10 வயதுச் சிறுவன் சுமார் 3 ஆண்டுகளாகக் கூடாரத்தில் தங்கி அறப்பணிகளுக்காக நிதி திரட்டியிருக்கிறார்."Boy in the Tent" என அறியப்படும் அந்த திட்டத்தை மேக்ஸ் அதனை 2020ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆரம்பித்தார். இத் திட்டத்தின்கீழ் சுமார் 8,60,000 டாலர் நிதியை மேக்ஸ் திரட்டினார்.தனிநபராக அவ்வளவு பெரிய தொகையைத் திரட்டியதற்காக உலகச் சாதனைப் புத்தகத்திலும் மேக்ஸ் இடம்பிடித்தார்.முன்னதாக மேக்ஸின் இந்தத் திட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியபோது சில இரவுகளை வெவ்வேறு இடங்களில் கழிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.அந்தவகையில் லண்டன் விலங்கியல் தோட்டமும் அதில் ஒன்று. தமது அனுபவம் பற்றி கூறிய மேக்ஸ்,"இந்த 3 ஆண்டுகள்தான் வாழ்நாளில் மிகச் சிறந்த தருணம்.அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். அளவில்லாத அனுபவங்களையும் பெற்றதாக தெரிவித்த சிறுவன் மேக்ஸ், வெளிப்புறக் கூடாரத்தில் உறங்கிப் பழகிவிட்டதால் இனி மெத்தையில் எப்படிப் படுத்துறங்குவது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement