• May 19 2024

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகள் புறக்கணிப்பு- உணவகம் ஒன்றிற்கு சீல்! samugammedia

Tamil nila / Aug 27th 2023, 6:09 pm
image

Advertisement

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை புறக்கணித்து, நீண்டகாலமாக பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்து வந்த  உணவகமொன்றை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு 12, மார்டிஸ் லேனில் உள்ள உணவகம் ஒன்றையே இவ்வாறு மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடையில்  கடந்த ஜூன் 15ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அந்த உணவகத்திற்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த உணவகத்திற்கு குற்றச்சாட்டை திருத்துவதற்காக ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவறுகளை திருத்திக்கொள்ளாத காரணத்தினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் நீதிமன்றில் அந்த உணவகம் குறித்த உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.

அதனை அடுத்து  மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் லோச்சனா அபேவிக்ரம, 25,000 ரூபா அபராதம் விதித்து குறித்த உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகள் புறக்கணிப்பு- உணவகம் ஒன்றிற்கு சீல் samugammedia நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை புறக்கணித்து, நீண்டகாலமாக பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்து வந்த  உணவகமொன்றை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு 12, மார்டிஸ் லேனில் உள்ள உணவகம் ஒன்றையே இவ்வாறு மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த கடையில்  கடந்த ஜூன் 15ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அந்த உணவகத்திற்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.அந்த உணவகத்திற்கு குற்றச்சாட்டை திருத்துவதற்காக ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவறுகளை திருத்திக்கொள்ளாத காரணத்தினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் நீதிமன்றில் அந்த உணவகம் குறித்த உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.அதனை அடுத்து  மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் லோச்சனா அபேவிக்ரம, 25,000 ரூபா அபராதம் விதித்து குறித்த உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement