• Nov 26 2024

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு...!

Chithra / Jun 23rd 2024, 11:06 am
image

 

 பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால், முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது. 

இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது. 

இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு.   பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால், முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது. இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது. இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement