• Nov 26 2024

சூடு பிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம் - கடும் நெருக்கடியில் பிரதமர்..!!

Tamil nila / May 26th 2024, 6:57 pm
image

பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்களான மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த அறிவிப்புகளை அவர்கள் தங்களின் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அத்துடன், தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், பென் வாலஸ் ஏற்கனவே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தெரசா மேயும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் பிரதமர் ரிஷி சுனக் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவில் அண்மைய காலங்களில் இடம்பெற்ற இடைக்கால மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

மேலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி முன்னேற்றங்களை கண்டுள்ள நிலையில் பொது தேர்தலிலும் அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், கன்சர்வேடிவ்கள் பொருளாதாரத்தை சேதப்படுத்தி, வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தியுள்ளனர் என்ற வாதத்துடன், தனது பிரச்சார திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, பொது தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட YouGov கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றிவாய்ப்பு 22 சதவீதமாகவும், தொழிற்கட்சியின் வெற்றிவாய்ப்பு 44 சதவீதமாகவும் காணப்படுதாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சூடு பிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம் - கடும் நெருக்கடியில் பிரதமர். பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.அமைச்சரவை அமைச்சர்களான மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது குறித்த அறிவிப்புகளை அவர்கள் தங்களின் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அத்துடன், தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், பென் வாலஸ் ஏற்கனவே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தெரசா மேயும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.இவ்வாறான பின்னணியில் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் பிரதமர் ரிஷி சுனக் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பிரித்தானியாவில் அண்மைய காலங்களில் இடம்பெற்ற இடைக்கால மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.மேலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி முன்னேற்றங்களை கண்டுள்ள நிலையில் பொது தேர்தலிலும் அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், கன்சர்வேடிவ்கள் பொருளாதாரத்தை சேதப்படுத்தி, வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தியுள்ளனர் என்ற வாதத்துடன், தனது பிரச்சார திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.இதேவேளை, பொது தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட YouGov கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றிவாய்ப்பு 22 சதவீதமாகவும், தொழிற்கட்சியின் வெற்றிவாய்ப்பு 44 சதவீதமாகவும் காணப்படுதாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement