• Oct 03 2024

அற்புதமான பங்களிப்பை வழங்கிய தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து..!!

Tamil nila / Jan 15th 2024, 8:49 pm
image

Advertisement

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை ஆகியவற்றில் நீங்கள் செய்யும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இன்று காலை வெளியிட்ட காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

"நாங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, அனைவருக்கும் சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறேன்." எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தைப் பொங்கலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பிரித்தானிய அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அற்புதமான பங்களிப்பை வழங்கிய தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை ஆகியவற்றில் நீங்கள் செய்யும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இன்று காலை வெளியிட்ட காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்."நாங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, அனைவருக்கும் சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறேன்." எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தைப் பொங்கலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பிரித்தானிய அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement