• Oct 27 2026

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Aathira / Oct 27th 2026, 9:03 am
image

2026 ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்ற 5ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில், குருநாகல் மாவட்டம் அரக்கியால கிராமத்தைச் சேர்ந்த மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அரக்கியால முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான், ஆண்களுக்கான T47 பிரிவின் நீளம் பாய்தல் போட்டியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

சர்வதேச அரங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி, இலங்கைக்கும் தனது சொந்த கிராமமான அரக்கியாலவுக்கும் பெருமை சேர்த்துள்ள இவரின் சாதனைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது வெற்றி, இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச மட்டத்திலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 2026 ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்ற 5ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில், குருநாகல் மாவட்டம் அரக்கியால கிராமத்தைச் சேர்ந்த மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.அரக்கியால முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான், ஆண்களுக்கான T47 பிரிவின் நீளம் பாய்தல் போட்டியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.சர்வதேச அரங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி, இலங்கைக்கும் தனது சொந்த கிராமமான அரக்கியாலவுக்கும் பெருமை சேர்த்துள்ள இவரின் சாதனைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.இவரது வெற்றி, இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச மட்டத்திலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement