• Feb 05 2025

சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய கொடூரம்; தாயின் இரண்டாவது கணவன் கைது

Chithra / Dec 6th 2024, 12:21 pm
image

 

14 வயது சிறுமியை கொலை செய்து, சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு அளித்துள்ளார். 

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், வீடொன்றில் கட்டப்பட்டு வரும் மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து,  சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய கொடூரம்; தாயின் இரண்டாவது கணவன் கைது  14 வயது சிறுமியை கொலை செய்து, சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், வீடொன்றில் கட்டப்பட்டு வரும் மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து,  சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement