• Apr 28 2024

மயிலத்தமடுவில் புத்தர்சிலை...! பொய்யான தகவல்களை பரப்பும் அம்பிட்டிய தேரர்...! பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 3:48 pm
image

Advertisement

மயிலத்தமடு பகுதியில் புத்தர் சிலையினை வைத்துள்ளனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் திவிலபொத்தானையில் சிங்களவர்களை விரட்டுவதாக பொய்யான தகவல்களை அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடன் இணைந்தவர்களும் பரப்பிவருவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தலைவர் சி.நிமலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் அடிவருடிகள் பண்ணையாளர்கள் தொடர்பாக பிழையான கருத்துகளை முகப்புத்தகங்கள் ஊடாக தெரிவித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,மாதவனை காணியினை வேறுமாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அபகரிப்பதற்கு எதிராக சித்தாண்டியில் 41வது நாளாகவும் பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இன்றைய தினமும் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தப்படும் வரையில் போராட்டம் தொடரும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தமது மேய்ச்சல் தரை காணியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுத்துவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

இன்றைய போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மயிலத்தமடுவில் புத்தர்சிலை. பொய்யான தகவல்களை பரப்பும் அம்பிட்டிய தேரர். பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு.samugammedia மயிலத்தமடு பகுதியில் புத்தர் சிலையினை வைத்துள்ளனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் திவிலபொத்தானையில் சிங்களவர்களை விரட்டுவதாக பொய்யான தகவல்களை அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடன் இணைந்தவர்களும் பரப்பிவருவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தலைவர் சி.நிமலன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் அடிவருடிகள் பண்ணையாளர்கள் தொடர்பாக பிழையான கருத்துகளை முகப்புத்தகங்கள் ஊடாக தெரிவித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,மாதவனை காணியினை வேறுமாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அபகரிப்பதற்கு எதிராக சித்தாண்டியில் 41வது நாளாகவும் பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.இன்றைய தினமும் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தப்படும் வரையில் போராட்டம் தொடரும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தமது மேய்ச்சல் தரை காணியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுத்துவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.இன்றைய போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement