• Jun 26 2024

கறைபடியாத தமிழ் மக்களின் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கவேண்டாம் - வெடியரசன் கோட்டை விவகாரம்.! SamugamMedia

Sharmi / Mar 16th 2023, 10:16 am
image

Advertisement

கறைபடியாத தமிழ் மக்களின் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கவேண்டாமென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெடியரச மன்னன் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ், கி.மு 200ஆம் ஆண்டுகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசன் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாட்டிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளம்.இந்நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேசசபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும் - வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்திவிட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கறைபடியாத தமிழ் மக்களின் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கவேண்டாம் - வெடியரசன் கோட்டை விவகாரம். SamugamMedia கறைபடியாத தமிழ் மக்களின் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கவேண்டாமென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வெடியரச மன்னன் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ், கி.மு 200ஆம் ஆண்டுகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசன் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.இந்நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாட்டிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளம்.இந்நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேசசபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும் - வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்திவிட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement