• Apr 23 2026

தமிழர் தாயகத்தில் தொடரும் பெளத்தமயமாக்கல் - வவுனியாவில் கவனயீர்ப்பு!

shanu / Apr 22nd 2026, 2:39 pm
image

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலை  கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். 


வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 


இதன்போது பௌத்தமயமாக்கலை  கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவினர்கள் தொடர்பில்  நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா  ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும்  தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் தொடரும் பெளத்தமயமாக்கல் - வவுனியாவில் கவனயீர்ப்பு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலை  கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது பௌத்தமயமாக்கலை  கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவினர்கள் தொடர்பில்  நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா  ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும்  தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement