ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்பீட உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதனால் நாட்டில் நடைபெற்று வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியின் அடையாளம் இனம் அல்ல, அது, கொள்கைகள் மற்றும் தகுதிகளில் இருக்க வேண்டும் என்று காசிலிங்கம் கீதாநாத் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில்,பொதுவேட்பாளர் கொள்கை, இனப் பிளவுகளை ஏற்படுத்தி, தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இதனால் ஏற்படும் வீழ்ச்சிக்கு தென்னிலங்கையைக் குறை கூறக்கூடாது.
தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், "சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனைக்கு அதிருப்தி வெளியிட்ட மொட்டு தரப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்பீட உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இதனால் நாட்டில் நடைபெற்று வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.ஜனாதிபதி பதவியின் அடையாளம் இனம் அல்ல, அது, கொள்கைகள் மற்றும் தகுதிகளில் இருக்க வேண்டும் என்று காசிலிங்கம் கீதாநாத் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில்,பொதுவேட்பாளர் கொள்கை, இனப் பிளவுகளை ஏற்படுத்தி, தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.எனவே தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இதனால் ஏற்படும் வீழ்ச்சிக்கு தென்னிலங்கையைக் குறை கூறக்கூடாது.தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், "சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.