• Jul 13 2025

கபில்தேவ் சாதனையை பின்தள்ளி : வரலாற்றுச் சாதனை படைத்த பும்ரா!

Thansita / Jul 12th 2025, 8:38 am
image

இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 387 ஓட்டங்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.  

ஜோ ரூட் சதம் அடித்தார் (104), ஜேமி ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதமடித்தனர்.  

இந்திய பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா அதிரடி காட்டினார். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், வெளிநாட்டு டெஸ்ட்களில் 13வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், இந்தியா சார்பில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரராக இடம்பிடித்துள்ளார்.  

முன்னைய சாதனையாளர்களான கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஜஹீர் கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். 

ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட்டுக்கள்

கபில் தேவ் - 12 முறை 5 விக்கெட்டுக்கள்

அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட்டுக்கள்


கபில்தேவ் சாதனையை பின்தள்ளி : வரலாற்றுச் சாதனை படைத்த பும்ரா இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 387 ஓட்டங்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.  ஜோ ரூட் சதம் அடித்தார் (104), ஜேமி ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதமடித்தனர்.  இந்திய பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா அதிரடி காட்டினார். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், வெளிநாட்டு டெஸ்ட்களில் 13வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், இந்தியா சார்பில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரராக இடம்பிடித்துள்ளார்.  முன்னைய சாதனையாளர்களான கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஜஹீர் கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட்டுக்கள்கபில் தேவ் - 12 முறை 5 விக்கெட்டுக்கள்அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட்டுக்கள்

Advertisement

Advertisement

Advertisement