• May 21 2024

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் - அமைச்சரவையில் தீர்மானம்..! samugammedia

Chithra / Nov 7th 2023, 1:44 pm
image

Advertisement

 

பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணிகள் கைக்கொள்ளல் மற்றும் கையகப்படுத்தல் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணிகள் கைக்கொள்ளல் மற்றும் கையகப்படுத்தல் காரணமாக 97 குடும்பங்களுக்கு வீடுகள் இழக்கப்பட்டுள்ளமையால் அவர்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்க வேண்டியுள்ளது.

அதற்காக அம்பாந்தோட்டை சிரிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேயர் அரசுக்குச் சொந்தமான காணியொன்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த காணியில் வீட்டு வசதிகளுக்கான 126 காணித்துண்டுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணித்துண்டுகள் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, 

பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக அம்பாந்தோட்டை சிரிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேயர் அரச காணியில் காணித்துண்டை ஒதுக்கி வழங்குவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் - அமைச்சரவையில் தீர்மானம். samugammedia  பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணிகள் கைக்கொள்ளல் மற்றும் கையகப்படுத்தல் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுபாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணிகள் கைக்கொள்ளல் மற்றும் கையகப்படுத்தல் காரணமாக 97 குடும்பங்களுக்கு வீடுகள் இழக்கப்பட்டுள்ளமையால் அவர்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்க வேண்டியுள்ளது.அதற்காக அம்பாந்தோட்டை சிரிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேயர் அரசுக்குச் சொந்தமான காணியொன்று அடையாளங்காணப்பட்டுள்ளது.குறித்த காணியில் வீட்டு வசதிகளுக்கான 126 காணித்துண்டுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணித்துண்டுகள் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக அம்பாந்தோட்டை சிரிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேயர் அரச காணியில் காணித்துண்டை ஒதுக்கி வழங்குவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement