• May 03 2024

கேக் வெட்டி கொண்டாட்டம்...! சிறிகொத்தாவில் களைகட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது ஆண்டு நிறைவு விழா...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 1:24 pm
image

Advertisement

ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது ஆண்டு நிறைவு விழா இன்று (06) சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது  ஆண்டு நிறைவை ஒட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் இன்று காலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2048ஆம் ஆண்டு ஜயகாமு யோசனையை தொடர்ந்து இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கட்சியொன்றின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள், சிறிகொத்த கட்சி தலைமையகங்கள் என்பனவற்றை ஒருங்கிணைத்து நவீன முறைகள் மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகிலா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தலைமையில் சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து, மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆண்டு நிறைவு விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.





கேக் வெட்டி கொண்டாட்டம். சிறிகொத்தாவில் களைகட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது ஆண்டு நிறைவு விழா.samugammedia ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது ஆண்டு நிறைவு விழா இன்று (06) சிறிகொத்தாவில் இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது  ஆண்டு நிறைவை ஒட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் இன்று காலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2048ஆம் ஆண்டு ஜயகாமு யோசனையை தொடர்ந்து இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கட்சியொன்றின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள், சிறிகொத்த கட்சி தலைமையகங்கள் என்பனவற்றை ஒருங்கிணைத்து நவீன முறைகள் மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும். கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகிலா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தலைமையில் சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து, மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆண்டு நிறைவு விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement