• May 18 2024

கனடாவில் கோர விபத்து- பறிபோன சிறுமியின் உயிர்: நால்வர் கவலைக்கிடம்! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 10:07 am
image

Advertisement

கியூபெக் மாகாணத்தின் மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான சாலை 20ல் ஏற்பட்ட பெரும் விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிறுமியுடன் பயணித்த நால்வர் ஆபத்தான நிலையில், மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியூபெக் மாகாணத்தின் Saint-Zotique பகுதி அருகாமையில், உள்ளூர் நேரப்படி பகல் 10.45 மணியளவில் குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஐவர் பயணித்துள்ள கார் மீது பலமாக மோதியது என குறிப்பிட்டுள்ளனர்.

கனரக வாகனத்தின் சாரதியால் உரிய நேரத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த கோர விபத்தினை அடுத்து மேற்கு நோக்கி செல்லும் பிரதான சாலை 20 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 34வது மற்றும் 69வது அவென்யூக்களுக்கு இடையில் முழுமையாக மூடப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு என உரிய அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கோர விபத்து- பறிபோன சிறுமியின் உயிர்: நால்வர் கவலைக்கிடம் samugammedia கியூபெக் மாகாணத்தின் மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான சாலை 20ல் ஏற்பட்ட பெரும் விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விபத்தில் சிறுமியுடன் பயணித்த நால்வர் ஆபத்தான நிலையில், மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியூபெக் மாகாணத்தின் Saint-Zotique பகுதி அருகாமையில், உள்ளூர் நேரப்படி பகல் 10.45 மணியளவில் குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஐவர் பயணித்துள்ள கார் மீது பலமாக மோதியது என குறிப்பிட்டுள்ளனர்.கனரக வாகனத்தின் சாரதியால் உரிய நேரத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும் இந்த கோர விபத்தினை அடுத்து மேற்கு நோக்கி செல்லும் பிரதான சாலை 20 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 34வது மற்றும் 69வது அவென்யூக்களுக்கு இடையில் முழுமையாக மூடப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு என உரிய அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement