• Sep 21 2024

தமிழர்களின் நிலையை புரிந்து கொண்ட கனடா..! இந்தியா தமது நலன்களிற்காகவே செயற்படுகின்றது..! சுரேஷ் ஆதங்கம்..! samugammedia

Sharmi / Jun 3rd 2023, 2:30 pm
image

Advertisement

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட  தையிட்டி புத்த விகாரையினை அகற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் மற்றும் தமிழ் தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும்,  தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள வட - கிழக்கு இணைக்கப்பட்ட மக்களின் இறைமைக்காகவும் சுயநிர்ணய போன்றவற்றிற்கும் இந்தியா  சர்வதேசத்தில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  தையிட்டி புத்த விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

தையிட்டி புத்த விகாரையானது தமிழ் மக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை அகற்றும் பொருட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேச மக்களுடன் இணைந்து 3 ஆம் கட்டமாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனை போன்று ஏனைய அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் என அனைவரும் இணைந்து தடைந்து முன்னெடுத்தால் இது அகற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தமிழர்கள் உரிமை சார்ந்த போராட்டத்தில் அவர்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே தமிழர்களால் இந்த நிலங்களில்  நீண்ட காலமாக நிலைத்திருக்க முடியும்.

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும் பலமழிந்து போனால் இனமழிந்து போகும் என்று கவிஞர் புதுவை இரத்தினத்துறை கவிதையினை வடித்துள்ளார். அந்த அடிப்படையிலே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழர்களின் தாயகங்களில் இடம்பெறும் துரித காணி அபகரிப்புக்களை தடுக்காவிடில் எமது சந்ததி இந்த மண்ணில் நீண்ட காலத்திற்கு இருக்காது.

எனவே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை  கடந்த 75 வருடங்களாக மக்கள் கோரியுள்ள போதிலும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், வடகிழக்கினை சேர்ந்த தமிழர் தாயகத்தை அபகரிக்கும் நோக்குடனே தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

எமது மக்கள் மீது தொடர்ந்து திணிக்கப்பட்ட போராட்டம் 2009 மே 18 பாரிய இனவழிப்புடன் முடிவடைந்துள்ளது. ஆயினும், மக்களிடம் இனப்படுகொலை நடந்தமைக்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அதனால் இன்று உலகம் கண்விழித்துள்ளது.

அந்த வகையில், கனேடிய பிரதமர்,  திட்டவட்டமாக இனவழிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என்று  அந்த அடிப்படையில் மே 18 இனவழிப்பு நாளாக அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்த மட்டில் இந்த விடயத்தில் வெட்கி தலை குனிய வேண்டும்.

இந்தியாவை நம்பியுள்ள ஈழத்து தமிழர்களின் நிலை எங்கோ உள்ள கனடா பிரதமருக்கு விளங்கியுள்ளது. ஆனாலும், இந்தியாவிற்கும்  விளங்காது என்று அல்ல. அவர்கள் கடந்த காலங்களில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் தமது நலன்களிற்காக செயற்பட்டுள்ளனர்.

1970 ஆம் ஆண்டு கால பகுதியில் இலங்கையை மையப்படுத்தி நடந்த பூகோள அரசியல் போட்டி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே பனிப்போரை ஏற்படுத்தியது. அதனால் தன்னுடைய நலனுக்காக இலங்கையில் தமிழர்களை பல்வேறு இயக்கங்களாக இந்தியா உருவாக்கி இங்கு இனம் அழிந்து போவதற்காக ஆபத்தான நிலையை உருவாக்கியது. அந்த நிலைமையே தற்பொழுதும் உள்ளது.

ஒற்றையாட்சியை திணித்து தமிழ் மக்களை சிங்களவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொடுக்கும் நிலையே இன்று காணப்படுகின்றது. ஆகவே, இந்தியா தமது நிலைப்பாட்டினை மாற்றியமைத்தல் வேண்டும்.

இந்த தீவில் தமிழர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சிங்களவர்களுடன் சம உரிமையுடன் வாழ்வதற்குரிய தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவிற்கும் சாதகமான சூழ்நிலை வரும். இல்லையெனில், இலங்கையை மையமாக கொண்டு நடக்கும் பூகோள அரசியல் போட்டியால் இலங்கை அரசு சீனாவுடன் செல்கின்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை வரலாம்.

அந்த வகையில் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள வட கிழக்கு இணைக்கப்பட்ட மக்களின் இறைமை,தமிழர்களின் தேசம் மற்றும்  தமிழர்களின் சுயநிர்ணய போன்றவற்றை அங்கீகரிக்கும் விதமாக இந்தியா சர்வதேசத்தில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களின் நிலையை புரிந்து கொண்ட கனடா. இந்தியா தமது நலன்களிற்காகவே செயற்படுகின்றது. சுரேஷ் ஆதங்கம். samugammedia சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட  தையிட்டி புத்த விகாரையினை அகற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் மற்றும் தமிழ் தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும்,  தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள வட - கிழக்கு இணைக்கப்பட்ட மக்களின் இறைமைக்காகவும் சுயநிர்ணய போன்றவற்றிற்கும் இந்தியா  சர்வதேசத்தில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  தையிட்டி புத்த விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், தையிட்டி புத்த விகாரையானது தமிழ் மக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை அகற்றும் பொருட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேச மக்களுடன் இணைந்து 3 ஆம் கட்டமாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். அதனை போன்று ஏனைய அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் என அனைவரும் இணைந்து தடைந்து முன்னெடுத்தால் இது அகற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளது. தமிழர்கள் உரிமை சார்ந்த போராட்டத்தில் அவர்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே தமிழர்களால் இந்த நிலங்களில்  நீண்ட காலமாக நிலைத்திருக்க முடியும். நிலமிழந்து போனால் பலமிழந்து போகும் பலமழிந்து போனால் இனமழிந்து போகும் என்று கவிஞர் புதுவை இரத்தினத்துறை கவிதையினை வடித்துள்ளார். அந்த அடிப்படையிலே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழர்களின் தாயகங்களில் இடம்பெறும் துரித காணி அபகரிப்புக்களை தடுக்காவிடில் எமது சந்ததி இந்த மண்ணில் நீண்ட காலத்திற்கு இருக்காது. எனவே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை  கடந்த 75 வருடங்களாக மக்கள் கோரியுள்ள போதிலும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், வடகிழக்கினை சேர்ந்த தமிழர் தாயகத்தை அபகரிக்கும் நோக்குடனே தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். எமது மக்கள் மீது தொடர்ந்து திணிக்கப்பட்ட போராட்டம் 2009 மே 18 பாரிய இனவழிப்புடன் முடிவடைந்துள்ளது. ஆயினும், மக்களிடம் இனப்படுகொலை நடந்தமைக்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அதனால் இன்று உலகம் கண்விழித்துள்ளது. அந்த வகையில், கனேடிய பிரதமர்,  திட்டவட்டமாக இனவழிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என்று  அந்த அடிப்படையில் மே 18 இனவழிப்பு நாளாக அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்த மட்டில் இந்த விடயத்தில் வெட்கி தலை குனிய வேண்டும். இந்தியாவை நம்பியுள்ள ஈழத்து தமிழர்களின் நிலை எங்கோ உள்ள கனடா பிரதமருக்கு விளங்கியுள்ளது. ஆனாலும், இந்தியாவிற்கும்  விளங்காது என்று அல்ல. அவர்கள் கடந்த காலங்களில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் தமது நலன்களிற்காக செயற்பட்டுள்ளனர். 1970 ஆம் ஆண்டு கால பகுதியில் இலங்கையை மையப்படுத்தி நடந்த பூகோள அரசியல் போட்டி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே பனிப்போரை ஏற்படுத்தியது. அதனால் தன்னுடைய நலனுக்காக இலங்கையில் தமிழர்களை பல்வேறு இயக்கங்களாக இந்தியா உருவாக்கி இங்கு இனம் அழிந்து போவதற்காக ஆபத்தான நிலையை உருவாக்கியது. அந்த நிலைமையே தற்பொழுதும் உள்ளது. ஒற்றையாட்சியை திணித்து தமிழ் மக்களை சிங்களவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொடுக்கும் நிலையே இன்று காணப்படுகின்றது. ஆகவே, இந்தியா தமது நிலைப்பாட்டினை மாற்றியமைத்தல் வேண்டும். இந்த தீவில் தமிழர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சிங்களவர்களுடன் சம உரிமையுடன் வாழ்வதற்குரிய தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவிற்கும் சாதகமான சூழ்நிலை வரும். இல்லையெனில், இலங்கையை மையமாக கொண்டு நடக்கும் பூகோள அரசியல் போட்டியால் இலங்கை அரசு சீனாவுடன் செல்கின்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை வரலாம். அந்த வகையில் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள வட கிழக்கு இணைக்கப்பட்ட மக்களின் இறைமை,தமிழர்களின் தேசம் மற்றும்  தமிழர்களின் சுயநிர்ணய போன்றவற்றை அங்கீகரிக்கும் விதமாக இந்தியா சர்வதேசத்தில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement