மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிர்வாகம் வழங்குவதில்லை எனத் தெரிவித்தே இவ்வாறு மேலதிக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சேவைகள் ஸ்தம்பிதம் சிக்கலில் அரச வைத்தியசாலைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிர்வாகம் வழங்குவதில்லை எனத் தெரிவித்தே இவ்வாறு மேலதிக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.