• May 03 2024

வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் - மெட்டா நிறுவனம் மீது வழக்கு

Chithra / Dec 16th 2022, 9:57 am
image

Advertisement

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டி.பி.எல்.எஃப்.) இடையே சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரில், சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா' மீது கென்யா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

உள்நாட்டுப் போரின் போது பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் - மெட்டா நிறுவனம் மீது வழக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டி.பி.எல்.எஃப்.) இடையே சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரில், சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா' மீது கென்யா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement