மருதமடு மாதாவின் திருச்சொருபத்திற்கு மணிமுடிய சூட்டிய நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகள் இன்று மற்றும் நாளை இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று காலை 06:00 மணியளவில் தமிழில் திருப்பலி, காலை 06:45 மணியளவில் சிங்களத்தில் திருப்பலி, காலை 08:00 மணியளவில் தமிழ் சிங்கள மொழிகளில் திருப்பலி (நற்கருணை சிற்றாலயத்தில்), காலை 10:00 மணியளவில் நூற்றாண்டு விழா நினைவு தபால் முத்திரை வெளியீடு, மாலை 06:00 மணியளவில் மாலைப்புகழ் ஆரம்பம், மாலை 07.45 மணியளவில் நற்கருணைப் பவனி, மாலை 08:30 மணியளவில் யூபிலி நினைவுமலர் வெளியீடு (மடுக்கோவிலின் புதிய தூயகக் குவிமாடம் (Dome) திறப்பு நிகழ்வு) என்பன இடம்பெறவுள்ளது.
இதேவேளை நாளையதினம், காலை 05:00 மணியளவில் முதல் திருப்பலி ( தமிழ் சிங்கள மொழிகளில்), காலை 06:15 மணியளவில் திருவிழா கூட்டுத்திருப்பலி என்பன இடம்பெறவுள்ளது.
மேலும் விழாத்திருப்பலி நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூபத்திற்கு அடையாளமுறையில் முடிசூட்டப்பட்டு திருப்பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசீர் வழங்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அறிவித்துள்ளார்.
மடு மாதாவுக்கு மணிமுடி சூட்டிய நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பம் மருதமடு மாதாவின் திருச்சொருபத்திற்கு மணிமுடிய சூட்டிய நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகள் இன்று மற்றும் நாளை இடம்பெறவுள்ளது.அதன்படி இன்று காலை 06:00 மணியளவில் தமிழில் திருப்பலி, காலை 06:45 மணியளவில் சிங்களத்தில் திருப்பலி, காலை 08:00 மணியளவில் தமிழ் சிங்கள மொழிகளில் திருப்பலி (நற்கருணை சிற்றாலயத்தில்), காலை 10:00 மணியளவில் நூற்றாண்டு விழா நினைவு தபால் முத்திரை வெளியீடு, மாலை 06:00 மணியளவில் மாலைப்புகழ் ஆரம்பம், மாலை 07.45 மணியளவில் நற்கருணைப் பவனி, மாலை 08:30 மணியளவில் யூபிலி நினைவுமலர் வெளியீடு (மடுக்கோவிலின் புதிய தூயகக் குவிமாடம் (Dome) திறப்பு நிகழ்வு) என்பன இடம்பெறவுள்ளது.இதேவேளை நாளையதினம், காலை 05:00 மணியளவில் முதல் திருப்பலி ( தமிழ் சிங்கள மொழிகளில்), காலை 06:15 மணியளவில் திருவிழா கூட்டுத்திருப்பலி என்பன இடம்பெறவுள்ளது.மேலும் விழாத்திருப்பலி நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூபத்திற்கு அடையாளமுறையில் முடிசூட்டப்பட்டு திருப்பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசீர் வழங்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அறிவித்துள்ளார்.