• May 18 2024

இலங்கையின் பொருளாதாரம், IMF நிதி குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Chithra / Jan 5th 2023, 8:04 am
image

Advertisement

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 8 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீள முடியும் என 2023 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.


பின்னர் குறித்த வளர்ச்சியை முறையாக பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி நிவாரணத்தை இன்னும் சில வாரங்களில் பெற்றுக்கொள்ள இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.


இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் ஒப்பந்தம் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கையின் பொருளாதாரம், IMF நிதி குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 8 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீள முடியும் என 2023 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.பின்னர் குறித்த வளர்ச்சியை முறையாக பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி நிவாரணத்தை இன்னும் சில வாரங்களில் பெற்றுக்கொள்ள இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.எனவே, கடந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் ஒப்பந்தம் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement