• May 18 2024

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்ற சந்திரிக்கா முயற்சி?

Sharmi / Apr 5th 2024, 10:25 am
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறிவைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய வியூகமொன்றை வகுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலை வராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு எதிராக சந்திரிகாவால் கொழும்புமேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதிவரை சுதந்திரக் கட்சியின் தலைவராகத் தொடர்வதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றையதினம் கட்டாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சியில் இருந்து மைத்திரியால் விலக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க, அமைச்சரான மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சரான லசந்த அழகிய வன்ன ஆகியோர் புதிய பாதையில் சுதந்திரக் கட்சி பயணிக்கவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

இதனால் சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவதற்குரிய காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் அவதானிகள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்ற சந்திரிக்கா முயற்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறிவைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய வியூகமொன்றை வகுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலை வராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு எதிராக சந்திரிகாவால் கொழும்புமேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதிவரை சுதந்திரக் கட்சியின் தலைவராகத் தொடர்வதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றையதினம் கட்டாணை பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, கட்சியில் இருந்து மைத்திரியால் விலக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க, அமைச்சரான மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சரான லசந்த அழகிய வன்ன ஆகியோர் புதிய பாதையில் சுதந்திரக் கட்சி பயணிக்கவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.இதனால் சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவதற்குரிய காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் அவதானிகள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement