• Nov 26 2024

இலங்கையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்..! கடும் நெருக்கடியில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்!

Chithra / Dec 28th 2023, 9:59 am
image

 

ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகையில், 

எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எரிபொருள் கொள்வனவுக்கான நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப் பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 

முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தெளிவாகத் தெரிகிறது. 

புற நகர்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெளிவாக மாற்றம் தெரிகிறது. அந்த பார்வையில்இ வர்த்தகம் கணிசமாக குறைந்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம். கடும் நெருக்கடியில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்  ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகையில், எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எரிபொருள் கொள்வனவுக்கான நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப் பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தெளிவாகத் தெரிகிறது. புற நகர்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெளிவாக மாற்றம் தெரிகிறது. அந்த பார்வையில்இ வர்த்தகம் கணிசமாக குறைந்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement