• Jun 06 2024

இலங்கையை வந்தடைந்த 'சார்ட்டர்' விமானம்...! கட்டுநாயக்கவில் அமோக வரவேற்பு...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 12:35 pm
image

Advertisement

Lot Polish Airlines இன் "சார்ட்டர்" விமான நடவடிக்கைகளின் தொடரின் முதல் "சார்ட்டர்" விமானம் இன்று(25) காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 252 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் போது முதலில் விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டதுடன் பாரம்பரிய வரவேற்பு நடன நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது.

இந்த "சார்ட்டர்" விமானச் செயல்பாடுகள் மார்ச் 26, 2024 வரை செயல்படும்.

மேலும் இந்த "சார்ட்டர்" விமானங்கள் செடோக், இலங்கை சுற்றுலா மற்றும் செக் குடியரசின் ஜெட்விங் டிராவல்ஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இந்த "சார்ட்டர்" விமானங்களின் வருகையுடன் இணைந்து கிழக்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு இடையிலான இலக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த Cedox உடன் தொடர்ச்சியான கூட்டு விளம்பர நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.



இலங்கையை வந்தடைந்த 'சார்ட்டர்' விமானம். கட்டுநாயக்கவில் அமோக வரவேற்பு.samugammedia Lot Polish Airlines இன் "சார்ட்டர்" விமான நடவடிக்கைகளின் தொடரின் முதல் "சார்ட்டர்" விமானம் இன்று(25) காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 252 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதன் போது முதலில் விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டதுடன் பாரம்பரிய வரவேற்பு நடன நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது.இந்த "சார்ட்டர்" விமானச் செயல்பாடுகள் மார்ச் 26, 2024 வரை செயல்படும்.மேலும் இந்த "சார்ட்டர்" விமானங்கள் செடோக், இலங்கை சுற்றுலா மற்றும் செக் குடியரசின் ஜெட்விங் டிராவல்ஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இந்த "சார்ட்டர்" விமானங்களின் வருகையுடன் இணைந்து கிழக்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு இடையிலான இலக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த Cedox உடன் தொடர்ச்சியான கூட்டு விளம்பர நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement